ரஜினியின் கருத்தை ஏன் அரசியலாக்க வேண்டும்? -குஷ்பு டுவிட்டரில் விமர்சனம்

ரஜினியின் கருத்தை ஏன் அரசியலாக்க வேண்டும்? என்று நடிகை குஷ்பு டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2019-04-09 10:22 GMT
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நதிகளை இணைப்போம் என்ற பா.ஜனதாவின் தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கது. இருப்பினும், தேர்தல் நேரம் என்பதால் அதிகம் பேச விரும்பவில்லை என குறிப்பிட்டார். ஆட்சிக்கு வந்ததும் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதனையடுத்து பா.ஜனதாவிற்கு ரஜினி ஆதரவு என்பது போன்ற செய்தி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இதற்கிடையே  ரஜினியின் கருத்தை ஏன் அரசியலாக்க வேண்டும்? என்று நடிகை குஷ்பு டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

குஷ்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை பற்றி ரஜினிகாந்த் சார் பேசியதை வைத்து ஏன் ஊடகங்கள் இவ்வளவு சப்தம் எழுப்புகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் நதிகள் இணைப்பு பற்றி ஒரு வார்த்தைப் பேசினார். அதனால் என்ன? ஒரு இந்திய குடிமகனாக ஒரு கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இல்லையா? அதை ஏன் அரசியலாக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்