தற்போதைய ஆட்சியில் இருப்பவர்கள் மண்ணால் செய்த தஞ்சாவூர் பொம்மைகள் - கமல்ஹாசன் விமர்சனம்

தற்போதைய ஆட்சியில் இருப்பவர்கள் மண்ணால் செய்த தஞ்சாவூர் பொம்மைகள் என கமல்ஹாசன் விமர்சனம் செய்தார்.

Update: 2019-04-14 14:04 GMT
சென்னை,

தூத்துக்குடி வேட்பாளாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

அரசு என்றால் ஆணவம் மட்டுமில்லை ஆளுமையும் இருக்க வேண்டும்.  நாட்டை அசுத்தப்படுத்தும் சக்தி இங்கே வந்துள்ளது. அதை இங்கிருந்து அகற்ற வேண்டும். 2 உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்துள்ளன. எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என தெரியவில்லை.

எவரொருவர் பிரதமராக வந்தாலும் தமிழகத்தை நசுக்க முடியாது. புற்றுநோயை விட கொடுமையாக இருக்கும் இந்த அரசையும் கழகங்களையும் விரட்ட வேண்டும். 

தமிழகம் இந்தியாவின் தலைவாசலாக மாறவேண்டும் என நினைப்பவன் நான். என்னை உந்தித்தள்ளிய கோபங்களில் தூத்துக்குடி கோபமும் ஒன்று. காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி வைத்துள்ளது மாநில அரசு அதை காப்பாற்ற வேண்டும். 

தற்போதைய ஆட்சியில் இருப்பவர்கள் மண்ணால் செய்த தஞ்சாவூர் பொம்மைகள் என கமல்ஹாசன் விமர்சனம் செய்தார்.

மேலும் செய்திகள்