தி.மு.க. ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாகத்தான் இருந்தாரா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

தி.மு.க. ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாகத்தான் இருந்தாரா? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி விடுத்து உள்ளார்.

Update: 2019-05-01 06:29 GMT
சென்னை

மே தினத்தை யொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார் கட்சி தலைவர் விஜயகாந்த். இந்த நிகழ்ச்சியில்  பிரேமலதா விஜயகாந்த் , மற்றும் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்..

பின்னர் பிரமேலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொன்பரப்பியில் சாதி மோதலை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மோதலை தூண்டிவிட்டு யாரும் ஆதாயம் தேடக்கூடாது.  
3 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் என்றால் சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டத்தான் செய்வார்கள்.  தி.மு.க. ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாகத்தான் இருந்தாரா?

தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கோமதி மாரிமுத்துவுக்கு வாழ்த்துகள்.

4 சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு  தே.மு.தி.க. ஆதரவு தெரிவித்து உள்ளது. 4 தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்வேன் அதற்கான தேதியை தே.மு.தி.க.  தலைமைக்கழகம் வெளியிடும் என கூறினார்.

மேலும் செய்திகள்