சதுப்பு நிலத்தில் அரசு அலுவலகம்; வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது: சென்னை உயர் நீதிமன்றம்

சதுப்பு நிலத்தில் அரசு அலுவலகம் கட்டுவது என்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2019-05-01 12:21 GMT
சென்னை,

சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுவதற்காக தமிழக அரசு சதுப்பு நிலம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டிருந்தது.

இதேபோன்று சோழிங்கநல்லூர், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதிகளில் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கும் நிலம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.  இதுபோன்ற சதுப்பு நில பகுதிகளில் அரசு கட்டிடங்கள், இசை பல்கலை கழகம் ஆகியவற்றை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

இதில், சதுப்பு நிலத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகம், இசை பல்கலை கழகம் கட்ட தமிழக அரசு பிறப்பித்த இரு அரசாணைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

நீர் சேமிப்பு பகுதிகளை பாதுகாக்காவிட்டால் தண்ணீருக்கு பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நாள் தொலைவில் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்