நாங்குநேரி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்தகுமார்

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வென்றதையடுத்து நாங்குநேரி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்தகுமார்.

Update: 2019-05-29 06:37 GMT
சென்னை, 

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் எச்.வசந்தகுமார் விலகினார். சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வென்றதையடுத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் .

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

எம்.பி.யாக சிறப்பாக செயல்பட சபாநாயகர் எனக்கு வாழ்த்து கூறினார்.  எம்.எல்.ஏ.வாக இருந்த 3 ஆண்டுகளில் 5 ஆண்டுகளுக்கான திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன்.  நாங்குநேரியில் பேருந்துகளே இல்லாத கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் செய்து  தந்து உள்ளேன்.

நாங்குநேரி தொகுதியில் திமுக போட்டியிடுமா என்பதை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும். ஏற்கனவே காங்கிரஸ் வென்ற தொகுதி என்பதால் காங்கிரசே போட்டியிட முயற்சி  செய்யும். ராகுல்காந்திதான் எங்களை வழி நடத்த முடியும் என்பதால் அவரே தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என கூறினார்.

மேலும் செய்திகள்