மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் உயர்வு; மாணவர்கள் அதிர்ச்சி

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் அளவும் அதிகரித்துள்ளது.

Update: 2019-06-06 04:24 GMT
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியாகின.  இந்த நிலையில், மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் அளவும் அதிகரித்துள்ளது.

முன்னேறிய பிரிவினருக்கு கடந்த ஆண்டு 119 ஆக இருந்த கட் ஆப் மதிப்பெண், இந்த ஆண்டு 134 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல ஓ.பி.சி. பிரிவினருக்கு 96 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த கட் ஆப் மதிப்பெண், இந்த ஆண்டு 107 ஆக அதிகரித்துள்ளது.

நீட் தேர்வு எளிதாக இருந்த‌தால், நிம்மதி அடைந்திருந்த மாணவர்கள், கட் ஆப் மதிப்பெண் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்