நிபா வைரஸ்: பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் நிபா வைரஸ் அறிகுறியுடன் இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-06 15:32 GMT
சென்னை,

அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

தமிழகத்தில் நிபா வைரஸ் அறிகுறியுடன் இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அனைத்து அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிபா சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன, அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு அனுமதியின்றி செயல்பட்டு வந்த 24 போதை மறுவாழ்வு மையங்களுக்கு அரசு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி தனியார் மறுவாழ்வு மையத்தில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது, காப்பக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அனுமதியின்றி இயங்கும் காப்பகங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்