கடந்த 6 மாதத்தில் ரெயில் மீது கல் வீசியதாக 95 வழக்குகள் பதிவு

தெற்கு ரெயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஓடும் ரெயில் மீது கல் மற்றும் பாட்டில் வீசியதாக நடப்பு ஆண்டில் (2019) கடந்த 6 மாதத்தில் (ஜனவரி முதல் ஜூன் வரை) 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 36 கல்வீச்சு சம்பவங்களில் பயணிகள் காயம் அடைந்தனர்.

Update: 2019-07-02 22:45 GMT
சென்னை, 

36 சம்பவங்களில் ரெயிலின் கண்ணாடி கதவுகள், ஜன்னல்கள் சேதம் அடைந்துள்ளன. இதுபோன்ற குற்றச்சம்பவத்தில் போதை ஆசாமிகளும், பள்ளி மாணவர்களும் அதிகம் ஈடுபடுகின்றனர். ரெயில்வே சொத்துகளை பராமரிக்கவும், பயணிகளை பாதுகாக்கவும் பொதுமக்கள் உதவ வேண்டும் என தெற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபோன்று ஓடும் ரெயில் மீது கல் வீசி பயணிகளுக்கும், ரெயில்வே சொத்துகளுக்கும் சேதம் விளைவிப்பவர்கள் மீது ரெயில்வே சட்டம் 154 பிரிவின் படி அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரெயில்வே கடுமையாக எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகள்