இல்லாத இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு நாடகங்கள் தி.மு.க. மீது தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

இல்லாத இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு நாடகங்கள் என்று தி.மு.க. மீது தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.

Update: 2019-07-15 18:45 GMT
சென்னை, 

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக தி.மு.க.–காங் கூட்டணி எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து பெருமிதம் எனும் ஸ்டாலின். அவைக்குறிப்பில் ஏறாத கோ‌ஷங்கள், கோரிக்கை மனு அளிப்பு வே‌ஷங்கள், இல்லாத இந்தி திணிப்பு எதிர்ப்பு நாடகங்கள், வந்துவிட்ட நீட் தேர்வுக்கு வீண் எதிர்ப்பும், வர மறுத்த காவிரி நீரை கோர மறந்த கூட்டணி தர்மம்?. ஏற்கனவே இருந்த ரெயில் ஊழியர் மொழி பயன்பாட்டு அரசாணைகளை உடனே அமலாக்கிய மைய அரசின் வேகத்தை எம்.பி.க்கள் சாதனை என வீண் ஜம்பம்.

பொய் வாக்குறுதி எனும் கமர்கட் தந்து காது கம்மலை திருடிய தி.மு.க., ஊழல் விஞ்ஞானிகளின் காதறுந்த ஊசிகள் அங்கே. வீண் ஜம்பம் இங்கே? இனி தமிழகம் ஏமாறப்போவதில்லை தாமரை மலர்ந்தே தீரும்.

எதுவும் செய்ய இயலாதவர்கள் விமர்சிக்கிறார்கள் என்கிறார் ஸ்டாலின். ஆம். பொய் வாக்குறுதி தர இயலாதவர்கள், ஓட்டுக்கு பணம் தர இயலாதவர்கள், ஊழல் செய்ய இயலாதவர்கள், வாரிசு அரசியல், குடும்ப அரசியல் செய்ய இயலாதவர்கள், கருப்பு பணம் பதுக்கி பணம் சேர்த்து அரசியல் வியாபாரம் செய்ய இயலாதவர்கள், தமிழ் மொழியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த இயலாதவர்கள். ஆனாலும் விமர்சிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்