காவிரியில் கர்நாடகா திறந்து விட்ட நீர் தமிழகம் வந்தடைந்தது

காவிரியில் கர்நாடகா திறந்து விட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுவை வந்தடைந்தது.

Update: 2019-07-22 02:37 GMT
பெங்களூரு,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக , காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து விநாடிக்கு 4,900 கன அடி நீரும், கபினியிலிருந்து 3,500 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய  இரு அணைகளுக்கும் வரும் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்திற்கு 8 ஆயிரத்து 400 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து சேர்ந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ந்து வருவதால் வரும் நாட்களில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்