மழைநீர் சேகரிப்பு பணிகளில் தமிழக அரசு துரிதமாக செயல்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

மழைநீர் சேகரிப்பு பணிகளில் தமிழக அரசு துரிதமாக செயல்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2019-08-07 13:51 GMT
சென்னை,

திருவள்ளூர் கூரம்பாக்கத்தில் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:- 

மழைநீர் சேகரிப்பு பணிகளில் தமிழக அரசு துரிதமாக செயல்படுகிறது.  நீர்நிலைகளை பாதுகாக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏரி, ஆறுகளை மீட்டெடுக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. சென்னையில் 53 ஏரிகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நீர்நிலை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

1,038 ஏரிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர்நிலை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி தமிழகத்தில் நிலவுகிறது. மழைநீர் சேகரிப்பு பணிகளில் தமிழக அரசு துரிதமாக செயல்படுகிறது.

பொருளாதார வளர்ச்சிக்கு நீர் மேலாண்மை அவசியம். பருவமழை காலத்திற்கு முன் நீர்நிலைகளை மேம்படுத்தி அதிகளவு நீர் சேமிக்க வழிவகை செய்யப்படும்.

நீரின் தேவையை சிந்தித்து மக்கள் செயல்பட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு வளமான நீராதாரத்தை நாம் விட்டுச் செல்ல வேண்டும். வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பேசிய அமைச்சர் வேலுமணி,

முதலமைச்சர் பழனிசாமி செய்ய முடிவதை மட்டும் தான் சொல்வார், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ஒருபோதும் அறிவிக்க மாட்டார். பதவியேற்றது முதல் பல்வேறு பிரச்சினைகளை தவிடு பொடியாக்கி, திறமையான, உறுதியான முதலமைச்சராக உள்ளார் என்றார்.

மேலும் செய்திகள்