அரசு மருத்துவர்கள் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய அதிகாரி; தமிழக அரசு நியமனம்

அரசு மருத்துவர்கள் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

Update: 2019-08-27 15:29 GMT
சென்னை,

தமிழகத்தில் அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினர், தகுதிக்கேற்ற ஊதியம், பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்டவை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மருத்துவ கல்லூரியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  தலைமை செயலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.  எனினும் மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், அரசு மருத்துவர்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்காக சுகாதார திட்ட பணிகள் இயக்குநர் செந்தில் ராஜ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.  அவர் 2 வாரங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மேலும் செய்திகள்