தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி விட்டதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.

Update: 2019-10-16 07:01 GMT
சென்னை

ஒரு நாள் முன்னதாகவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  தொடங்கியுள்ளது. நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றே துவங்கியது. தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என வானிலை மையம் அறிவித்து உள்ளது.

வானிலை மையத்தின் தென்மண்டல துணைத்தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி,  கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் கனமழை பெய்யும்.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திராவில் ஒரு நாளைக்கு முன்னதாக தொடங்குகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் பூந்தமல்லியில் 11 சென்டிமீட்டர் மழையும் பாம்பனில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

இந்த ஆண்டு நான்கு நாட்களுக்கு முன்னதாக வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. 17, 18 ந்தேதிகளில் குமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கூறினார்.

மேலும் செய்திகள்