கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் - பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் தீர்மானிக்கப்படவில்லை

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோருடனான ஒப்பந்தம் தீர்மானிக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-10-19 05:48 GMT
சென்னை

நடிகர்  கமல்ஹாசன் மக்கள்  நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அவரது கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் 4 சதவீத வாக்குகளை பெற்றார்.

சில தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு வாக்குகள் கிடைத்தன. 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்தன. 11 தொகுதிகளில் 3-வது இடம் பெற்றது. இது கமல்ஹாசனுக்கும் அவரது கட்சியினருக்கும் உற்சாகத்தை அளித்தது.

அடுத்த கட்டமாக சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் வேகமாக அடியெடுத்து வருகிறார். கட்சிக்கு சரியான நிர்வாகிகளை தமிழகம் முழுக்க நியமிக்கவும் தொடர்ந்து கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கமல்ஹாசனுடன் கைகோர்க்க உள்ளார் என கூறப்பட்டது. ஆனால் ஏற்கனவே கமல்ஹாசனின் மக்கள்  நீதி மய்யம்  பிரசாந்த் கிஷோர்  நிறுவனமான ஐ-பிஏசி உடன் ஏற்கனவே ஓப்பந்தத்தில் உள்ளது. 

தமிழகத்தில் அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள கட்சியின் அடிப்படை கட்டமைப்பு முதல் பிரசாரம் வரை பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தமிழகத்தில் தனது நிறுவனத்துக்காக 150க்கும் மேற்பட்ட இளைஞர்களை பணிக்கு எடுத்து இருக்கும் பிரசாந்தின் நிறுவனம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை தொடங்கி விட்டது.

தற்போது ஒப்பந்தத்தை புதுப்பிக்கலாமா என்பது குறித்து அந்த நிறுவனத்தின் செயல் திறன் குறித்து கட்சியில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிவடைகிறது.

ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஒருவர் கூறும் போது தெரிவித்துள்ளார்.  இது கட்சியின் உள் விவாதங்கள் மற்றும் ரகசியமானவை. ஜனவரி மாதத்தில் அவர்களுடனான எங்கள் ஒப்பந்தத்தின் முடிவுக்கு வரும்போது நாங்கள் எங்கள் முடிவை எடுப்போம்.

ஐ-பிஏசி நிறுவனத்தின் செயல்முறைகள்  அவர்கள் வசூலிக்கும் பணத்திற்குபோதுமானதாக இல்லை  என்று சிலர் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், இந்தநிறுவனத்திற்கு  மதிப்பு உள்ளதாகவும் சிலர் நினைக்கிறார்கள். மேலும் 2021 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தல் வரை அதைத் தொடர வேண்டியது அவசியம் என்று நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

கமல்ஹாசன்  2021 நவம்பர் 7 ஆம் தேதி தனது  பிறந்தநாளை முன்னிட்டு தமிழக  சட்டமன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தைத் தொடங்குவார். தற்போது இயக்குனர் ஷங்கருடன் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

கிஷோர் மற்றும் ஐ-பிஏசி  நிறுவனம்  அதிமுகவை அணுகியதாகவும், ஆனால் நடிகர் ரஜினிகாந்த்   ஐ-பிஏசி  நிறுவனத்துடன் இன்னும்  எதுவும் திட்டமிடவில்லை என்று தகவல்கள் வருகிறது. அதிமுக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இவ்வளவு பெரிய  திட்டத்தை  செய்லபடுத்த செலவு மற்றும் அதன் முறைகளின் செயல்திறன் தீவிரமாக உள்ளது  என கூறினார்.

தேர்தல்களுக்கு வியூகம் அமைத்து தருவதில் அகில இந்திய அளவில் பிரபலமானவர் பிரசாந்த் கிஷோர். இவர் தலைமையில் ஐ பேக் என்ற நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது.

இதற்கு முக்கிய காரணமே பிரசாந்த் கிஷோரின் திட்டங்களும் வியூகங்களும் தான் என்பது பின்னர் தெரிய வந்தது. பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சி அமைவதற்கும் காரணமாக இருந்தார். சமீபத்தில் பிரசாந்த் கிஷோரின் திட்டங்களால் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றினார்.

தமிழகத்தில் அடுத்து வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக வியூகம் அமைக்க பிரசாந்த் கிஷோரை தமிழக அரசியல் கட்சிகள் அணுகியதாக தகவல்கள் வந்தன. கமல்ஹாசனும் பிரசாந்த் கிஷோரை அணுகினார். ஆனால் பிரசாந்த் கிஷோர் மற்ற கட்சிகளை புறக்கணித்துவிட்டு கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார்.

மேலும் செய்திகள்