போக்கிடத்திற்கு வழியில்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை -கமல்ஹாசன் பேச்சு

நடிகர் கமல்ஹாசனன் தனது பிறந்தநாளை முன்னிட்டு பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்து பேசினார்.

Update: 2019-11-07 08:13 GMT
ராமநாதபுரம்,

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரான கமல்ஹாசன் இன்று தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனது ரசிகர்கள் மற்றும் கட்சியினருடன் பிறந்தநாளை கொண்டாடினார்.

விழாவின் போது தனது தந்தை சீனிவாசனின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை ஏற்றி வைத்த அவர் தனது ரசிகர்கள் மற்றும் கட்சித்தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர்,  “போக்கிடத்திற்கு வழியில்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை என பலருக்கு தெரியும். நான் அரசியலுக்கு வருவதை என் குடும்பத்தினர் விரும்பவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தொழிலாளியாக இல்லாமல் வேலை தருபவராக மாற வேண்டும். பல தொழில்களுக்கு வேலையாட்கள் இல்லை என்ற நிலையும் இருக்கிறது.

துப்புரவுப் பணிக்கு பி.ஹெச்.டி படித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. வேலைக்காக இங்குள்ளவர்கள் இடம்பெயர்ந்து செல்லக் கூடாது.

நான் சலூன் கடையில் ஒன்றரை மாதம் வேலை பார்த்திருக்கிறேன், எந்த  தொழிலும் கீழானது இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்