பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியது

40 ஆண்டுகளுக்குப் பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியுள்ளது.

Update: 2019-11-10 02:19 GMT
ஈரோடு,

கடந்த 1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது முதல் முறையாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியுள்ளது.

130 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். வடகிழக்கு பருவமழைக் காலங்களில் அதிகபட்சமாக 105 அடி வரை அணையின் நீர்மட்டம் பராமரிக்கப்படுகிறது.

ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்திற்கான நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது.

நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவின் எல்லைப்புற மாவட்டங்களில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு சுமார் 2,342 கனஅடியாக உள்ளது.  தற்போது 32.8 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து வெளியேறும் அதிகபட்ச நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்