நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

Update: 2019-11-12 13:08 GMT
சென்னை,

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த வெள்ளி கிழமை காலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல தனக்கு பா.ஜ.க. சாயம் பூச முயற்சி நடப்பதாக கூறினார். நடிகர் ரஜினிகாந்தின் பேட்டி சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறிப்போனது.

இதையடுத்து, சிறிது நேரத்தில் மீண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், நான் எப்போதும் வெளிப்படையாக பேசி  வருகிறேன். நான் கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன். தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என கூறினார்.

இந்நிலையில், தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இதன்பின்னர் அவர், கொடைக்கானல் மலைப்பகுதியில் ஊருக்குள் யானைகள் வராமல் இருக்க அகழிகள் அமைக்கப்படும்.  கொடைக்கானல் வனப்பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த மாரியம்மாள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்