சபரிமலை செல்ல அரசு சார்பில் நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள்

சபரிமலை செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Update: 2019-11-14 08:53 GMT
சென்னை,

கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. அங்கு ஆண்டு தோறும் மக்கள் ஏராளமானோர் அந்த கோவிலுக்கு கார்த்திகை மாதம் முதல் மாலை அணிந்து  விரதம் இருந்தும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், சபரிமலை செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 55 பேருந்துகளும், திருச்சியில் இருந்து 2 பேருந்துகளும்,  மதுரையில் இருந்து  2 பேருந்துகளும், புதுச்சேரியில் இருந்து 2 பேருந்துகளும், தென்காசியில் இருந்து  3 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்