சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்: இன்று முதல் முன்பதிவு

சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தமிழகத்திலிருந்து செல்லும் சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

Update: 2019-11-15 04:31 GMT
சென்னை,

மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை (சனிக்கிழமை) நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அய்யப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தமிழகத்திலிருந்து செல்லும் சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு இன்று தொடங்குகிறது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையிலிருந்து 55 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படவுள்ளன. 

திருச்சி, மதுரை, புதுச்சேரியிலிருந்து தலா 2 பேருந்துகளும், தென்காசியிலிருந்து 3 பேருந்துகளும் நாள்தோறும் சபரிமலைக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 64 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை கூட்டப்படும் என்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகளுக்கு இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம். போக்குவரத்து கழகத்தின் tnstc மற்றும் RED BUS,BUSINDIA, PAYTM, MAKEMYTRIP,GOIBBO உள்ளிட்ட வலைத்தளங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்