சென்னையில் பரவலாக கனமழை; வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

Update: 2019-12-01 03:07 GMT
சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், சென்னையில் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

தென்கிழக்கு அரபி கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.  இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்நிலையில், சென்னையில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் பெய்துள்ளது.  சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், கிண்டி, அண்ணாசாலை, வேப்பேரி, வடபழனி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.  தொடர்ந்து இன்று காலையில் இருந்தும் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.  மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கி இருந்தால் 044-25384520, 044-25384530, 044-25384540 மற்றும் 94454-77205 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்