பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலையில் மாற்றம் இல்லை

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.77.92 ஆக விற்பனையாகிறது.

Update: 2019-12-12 02:25 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “  சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.77.92ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் லிட்டர் ரூ.69.81 ஆகவும் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்