அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் -பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2019-12-26 15:38 GMT
சென்னை,

நிலத்தடி நீர்வளத்தை சிறப்பாக நிர்வகிப்பதற்காக ‘அடல் பூஜல் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கர்நாடகா, அரியானா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

இதற்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கி, மத்திய மந்திரிசபை நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளித்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் அமலில் இருக்கும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, டெல்லி விஞ்ஞான் பவனில் இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி எழுதிய  கடிதத்தில்,

நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டமான அடல் பூஜல் யோஜனா திட்டத்தில்  தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் என்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்த குடிமராமத்து உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்