சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2020-01-29 01:51 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.76.44க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.70.33க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றம் ஏதுமின்றி அதே விலையில் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்