திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த டி.எம்.செல்வகணபதிக்கு பதில் வீரபாண்டி ராஜா

திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக வீரபாண்டி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

Update: 2020-02-03 07:01 GMT
சென்னை

திமுகபொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த டி.எம்.செல்வகணபதிக்கு பதில் வீரபாண்டி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக டி.எம்.செல்வகணபதியும், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து வீரபாண்டி ராஜா விடுக்கப்பட்டிருக்கிறார். சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக எஸ்.ஆர்.சிவலிங்கமும், நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த செ.காந்தி செல்வன் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்