சென்னையில் 3வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 3வது நாளாக பெட்ரோல் விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Update: 2020-02-13 02:46 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல் விலை தொடர்ந்து 3வது நாளாக எந்தவித மாற்றமுமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.74.73க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து ரூ.68.45க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தொடர்ந்து கடந்த சில வாரங்களாக வாகன எரிபொருளின் விலை குறைந்து வருவது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்