முதலமைச்சர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு

முதலமைச்சர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

Update: 2020-02-16 05:15 GMT
சென்னை,

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும், சட்டப்பேரவையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்ற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடஙகளில் இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை செய்து வந்தனர். இதில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சருடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர். 
 
இதனிடையே தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்