சட்டசபையில் இருந்து வெளி நடப்பு ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்

வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி தரவில்லை என சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செயததாக மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Update: 2020-02-17 07:04 GMT
சென்னை

வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். முதல்-அமைச்சர் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி திமுக  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடையாள வெளி நடப்பு செய்தனர். 

சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு தயாராக இல்லாததை கண்டித்தும், முதல்வரின் பதிலை ஏற்க மறுத்தும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புக்கு பின் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி தரவில்லை. திமுகவின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்ததை கண்டித்து வெளிநடப்பு செய்தோம். விவாதம் நடத்தாமலேயே ஏற்க மறுப்பதை, ஒருபோதும் ஏற்க முடியாது. இது அடையாள வெளிநடப்புதான் என கூறினார். 

மேலும் செய்திகள்