108 ஆம்புலன்ஸ் வருவதை டிராக் செய்ய 2 மாதத்தில் 'செயலி' - அமைச்சர் விஜயபாஸ்கர்

108 ஆம்புலன்ஸ் வரும் பாதை, ஓட்டுநரின் அலைபேசி எண் உள்ளிட்டவை தெரியும் வகையில் 2 மாதத்தில் 'செயலி' அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டபேரவையில் அறிவித்துள்ளார்.

Update: 2020-02-20 08:25 GMT
சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த 2008 செப்டம்பர் 15-ந் தேதி 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை கொண்டு வரப்பட்டு விபத்தில் சிக்கி தவிப்பவர்களையும், கர்ப்பிணிகளையும் காப்பாற்றும் சேவையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆம்புலன்ஸ் சேவையின் சிறப்பை மேலும் சிறப்பாக்கும் வகையில் 108 ஆம்புலன்ஸ் வரும் பாதை, ஓட்டுநரின் அலைபேசி எண் உள்ளிட்டவை தெரியும் வகையில் 2 மாதத்தில் 'செயலி' அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டபேரவையில் அறிவித்துள்ளார்.

இதையடுத்து விரைவில் ஆம்புலன்ஸ் சேவைக்காக புதிதாக 200 வாகனங்கள் வாங்க முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்