தி.மு.க. கூட்டணிகளின் தேச விரோத செயல்களை கண்டித்து கலெக்டர் அலுவலகம் நோக்கி 28-ந்தேதி பேரணி - தமிழக பா.ஜ.க. அறிவிப்பு

தி.மு.க. கூட்டணிகளின் தேச விரோத செயல்களை கண்டித்து கலெக்டர் அலுவலகம் நோக்கி 28-ந்தேதி பேரணி நடத்தப்போவதாக தமிழக பா.ஜ.க. அறிவித்துள்ளது. தமிழக பா.ஜ.க.வின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-02-23 22:45 GMT
சென்னை, 

பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் பாகிஸ்தான் முஸ்லிம்களை ஆதரிக்கும் தேச விரோத செயல்களை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வருகிற 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகம் நோக்கி பா.ஜ.க. சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளது.

இந்த பேரணியை ஒருங்கிணைக்கவும், சிறப்பான முறையில் நடத்துவதற்கும் மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர்கள் எம்.முருகானந்தம், வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எம்.என்.ராஜா, எம்.சுப்பிரமணியன், தேசிய இளைஞரணி துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம், சென்னை கோட்ட பொறுப்பாளர் எம்.சக்கரவர்த்தி, மாநில இளைஞரணி தலைவர் பி.வினோஜ் செல்வம் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்