தனியார் பால் விலையை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் - முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை

தனியார் பால் விலையை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-02-25 20:45 GMT
சென்னை,

அத்தியாவசிய உணவு பொருளாக விளங்கும் பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலை உயர்வு, பால் தட்டுப்பாடு என்று காரணம் கூறி இந்த ஆண்டிலேயே 2-வது முறையாக பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தி உள்ளன. 2014-ம் ஆண்டு முதல் இதுவரை பாலின் விலை ரூ.32 வரை உயர்ந்திருக்கிறது.

எனவே அரசு இனியும் தாமதிக்காமல் தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைப்படுத்த வேண்டும். அவற்றின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை அரசே நிர்ணயம் செய்யும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும். பால் தட்டுப்பாடு உள்ளது என்பது எந்தளவு உண்மை? என்பதை ஆராய்ந்து பால் உற்பத்தியை அதிகப்படுத்த போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்