மேட்டூர் அணையின் நீர்மட்டம் நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது.

Update: 2020-03-09 04:26 GMT
மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர், தேவைக்கேற்ப அதிகரித்தோ, குறைத்தோ திறந்து விடப்படும். கடந்த 20 நாட்களுக்கு மேலாக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குடிநீருக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக கடந்த 6-ந் தேதி காலை முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் தேவை குறைந்துள்ளதால், நேற்று மாலை 6 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 104.72 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 195 கனஅடியாக உள்ளது. தண்ணீர் திறப்பை விட நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணை நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.6 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 116 கனஅடியாக உள்ளது.  நீர் இருப்பு 70.9 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் செய்திகள்