கொரோனா வைரஸ் பீதியால் சென்னை விமான நிலையத்தில் 16 விமானங்கள் ரத்து

கொரோனா வைரஸ் பீதியால் பிற நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்ல வேண்டிய 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Update: 2020-03-12 20:30 GMT
ஆலந்தூர், 

சீனாவை தொடர்ந்து உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகளில் சுற்றுலா விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளனர். விமான பயணங்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ் பீதியால் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் கடந்த 2 நாட்களாக சென்னை விமான நிலையம் வந்து செல்ல வேண்டிய 20 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டன.

இந்தநிலையில் 3-வது நாளாக நேற்று கொரோனா வைரஸ் காரணமாக பயணிகள் வரத்து குறைவால் பிராங்போர்ட், குவைத், தோகா, ஹாங்காங் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்ல வேண்டிய 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்