மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-03-13 11:28 GMT
சென்னை,

சாலை விபத்தில் காயமடைந்தவர் கூடுதல் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் பிறப்பித்த உத்தரவில்,

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும். மது போதையில் வாகனம் ஓட்டுவோரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க, போலீசார் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். 

கைது செய்யப்படுபவர்கள் குறித்த அறிக்கையை மாதந்தோறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க தனிப்பிரிவை அமைக்க வேண்டும் எனவும்  நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

1937ம் ஆண்டு முதல் 'மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு' என்ற வாசகம் தான், தமிழகத்தில் மதுபான பாட்டில்கள் மீது எழுதப்பட்டிருந்தது.

தற்போது முதல் முறையாக அந்த வாசகம் மாற்றப்பட்டு புது வாசகம் சேர்க்கப்பட உள்ளது. அதில்,   ‘மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற வாசகம் மதுபான பாட்டில்களில் இடம் பெறுகிறது.

மேலும் செய்திகள்