கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை- முதல்வர் பழனிசாமி

கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2020-03-17 07:19 GMT
சென்னை

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதால் சவாலாகத்தான் பார்க்கிறேன்.  கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன்.  அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலைபார்க்க  நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஸ்டாலின் வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை.போதுமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. நான் உள்பட எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுகிறது.

சட்டப்பேரவைக்கு வரும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

மேலும் செய்திகள்