கொரோனா வைரஸ் எதிரொலி; சென்னை தி.நகரில் பெரிய கடைகளை மூட உத்தரவு

கொரோனா வைரஸ் எதிரொலியாக சென்னை தியாகராயநகரில் உள்ள பெரிய கடைகளை 10 நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-03-17 14:08 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ந்தேதி வரை மூட தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.  திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் அனைத்து விளையாட்டு அரங்குகளையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.  மாநாடு, ஊர்வலம், கருத்தரங்கு நடத்த தடை விதிக்கப்பட்டது.

சென்னை தியாகராயநகரில் அனைத்து வகையான பொருட்களையும் வாங்க கூடிய அளவுக்கு நிறைய கடைகள் அமைந்துள்ளன.  இதனால் பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி வழக்கம்போல் திரளாக குவிந்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தியாகராயநகரில் உள்ள பெரிய கடைகளை 10 நாட்களுக்கு மூடும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

இதேபோன்று சென்னையில் உள்ள பூங்காக்கள் மூடப்படும் என்றும் வங்கி ஏ.டி.எம்.களை அடிக்கடி தூய்மைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் ஆணையர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்