சாலை பணியில் காலதாமதம் ஏற்பட்டால் காண்டிராக்டர் மீது நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சாலை பணியில் காலதாமதம் ஏற்பட்டால் காண்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2020-03-19 06:03 GMT
சென்னை, 

சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி (விளவங்கோடு தொகுதி), “கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முழுமையாக பணியை முடிக்க மத்திய அரசுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 

காவல்கிணறு முதல் களியக்காவிளை வரை உள்ள சாலை சேதம் அடைந்துள்ளது. ஆனால், சேதமடைந்த சாலைகள் செப்பனிடப்படவில்லை. 2017-ம் ஆண்டு முதல் ஒரே காண்டிராக்டர் இந்த பணியை செய்து வருகிறது. அதை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சாலை பணியில் கால தாமதம் ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்