கொரோனாவை எதிர்கொள்ள ரூ.4 ஆயிரம் கோடி தேவை; பிரதமருக்கு முதல் அமைச்சர் கடிதம்

கொரோனாவை எதிர்கொள்ள ரூ.4 ஆயிரம் கோடி தேவை என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-03-25 13:51 GMT
சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரசை எதிர்கொள்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்றிரவு முதல் 21 நாட்கள் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதுவரை 23 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  தமிழகத்தில் ஊரடங்கையொட்டி பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள தமிழகத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி தேவை என பிரதமர் மோடிக்கு  முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கொரோனா பாதிப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ள தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.  சிறு, குறு, நடுத்தர தொழில் செய்வோர் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வங்கி கடன் வட்டி மற்றும் அபராத தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்