விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-23 07:05 GMT
சேலம்,

முதல் அமைச்சர் பழனிசாமி சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன.  புறநகர் பகுதிகளில் சிறு குறு தொழில்கள் இயங்கத்தொடங்கியுள்ளன.  

ஆட்டோக்கள் இயக்கவும் சலூன்களை இயக்கவும் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவக் குழு ஆலோசனையின் படி கொரோனாவை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்கள் வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.  அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை.கொரோனா தடுப்பதில் தமிழக அரசு முழு வீச்சில் செயல்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்களின் பணி பாராட்டுக்குரியது. 

அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஸ்டாலின் அரசின் மீது புகார் தெரிவிக்கிறார். பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததால்தான் புகார் அடிப்படையில் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ் பாரதி இழிவாகப் பேசியபோதே கட்சி தலைவரான ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். இ டெண்டரில் முறைகேடு என ஆர்.எஸ் பாரதி கூறியதில் உண்மையில்லை. ஏதோ விஞ்ஞானி போலப் பத்திரிகை விளம்பரத்துக்காகப் பொய் புகார் கொடுத்துள்ளார்” என்றார். 

மேலும் செய்திகள்