தமிழகத்துக்கு ஏசி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை

தமிழகத்துக்கு ஏசி வசதி இல்லாத 4 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2020-05-23 17:08 GMT
சென்னை,

நாடு முழுவதும் தற்போது 4வது முறையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தசூழலில் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாள்தோறும், ஏ.சி. அல்லாத 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தமிழகத்துக்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி கோவை - மயிலாடுதுறை, விழுப்புரம் - மதுரை, கோவை - காட்பாடி, திருச்சி - நாகர்கோவில் வழித் தடங்களில் ரயில்களை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரயில்வே அமைச்சகம் தென்னக ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளது. 

முன்னதாக ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் மட்டுமே செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்