தமிழகத்தில் கொரோனா பாதிப்பு - புதிய உச்சத்தை தொட்டது: மேலும் 1,286 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2020-06-03 13:28 GMT
சென்னை,

5-வது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்ட தகவலின்படி,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1012 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 16,574 லிருந்து 17,598 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் முதன்முறையாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது இன்று கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,706லிருந்து 14,316 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 610 பேர் ஒரே நாளில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 11 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவால் இதுவரை 158 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 4-வது முறையாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்