தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2020-06-29 15:04 GMT
சென்னை, 

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2,212 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் இந்த எண்ணிக்கை 47,749 ஆக உயர்ந்துள்ளது. 37,331 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் ஒரே நாளில் 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்துள்ளது.  

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  

இதன்படி,  சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போதுள்ள முழு ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை தொடரும்

* ஜூலை 5 ஆம் தேதி முதல் 4 ஞாயிற்றுகிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்

* மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்

* மாவட்டங்களுக்குள் தனியார் மற்றும் அரசுப் போக்குவரத்து ஜூலை 1 - ஜூலை 15 வரை தற்காலிகமாக நிறுத்தம்

* மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி தரிசனம் அனுமதிக்கப்படாது

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த வித தளர்வும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்

* மதம் சார்ந்த வழிபாடுகள், சுற்றுலா தலங்களுக்கு தடை நீட்டிப்பு

* சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் அனுமதிபெற்று இறைச்சி கடைகள் செயல்படலாம்

* திருமணம், இறுதிசடங்குகளில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதி

* பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கு தடை தொடரும் என்றும், ஆன்லைன் கல்விக்கு தடையில்லை என்றும், மாவட்டம், மாநிலங்களுக்கு இடையே இ-பாஸ் நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்த விவரம்:-











மேலும் செய்திகள்