சாத்தான்குளம் சம்பவம்: நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் மற்றும் சாட்சி சொன்ன பெண் காவலருக்கும் வாழ்த்துக்கள் - கமல்ஹாசன்

சாத்தான்குளம் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் மற்றும் சாட்சி சொன்ன பெண் காவலருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-30 15:03 GMT
சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். 

பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பதில் கூறியிருப்பதாவது:-

சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்றும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்