சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-01 02:55 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர்.  இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரிக்கும் படியும், இந்த விசாரணைக்காக அவர் சாத்தான்குளத்தில் தங்கியிருக்கும்படியும் ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் சாத்தான்குளத்தில் விசாரணை நடத்தி வருகிறார். அவரது விசாரணையை மாவட்ட நீதிபதி கண்காணித்து வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.ஐ. இந்த விசாரணையை துவங்குவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். இந்த வழக்கை பொறுத்தவரை தாமதத்தை இந்த கோர்ட்டு விரும்பவில்லை.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி உள்ளனர். ஒரு நொடி கூட வீணாகக்கூடாது. எனவே சி.பி.சி.ஐ.டி. நெல்லை துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், இந்த வழக்கு விசாரணையை தற்காலிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்ட நீதிபதி, மாவட்ட நிர்வாகம், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உரிய ஆவணங்களை உடனடியாக டி.எஸ்.பி.யிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் இன்றே அதை கையில் எடுக்க வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிசிஐடி வழக்குப்பதிவு


இந்த நிலையில்,  சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. கோவில்பட்டி கிளைச் சிறை ஆவணங்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அரசு கட்டுப்பாட்டில் இருந்தபோது மர்ம மரணம் என சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்