சாத்தான்குளம் சம்பவம் போலீசாரின் மன அழுத்தத்தால் நடைபெற்றது- மதுரை ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

சாத்தான்குளம் சம்பவம் போலீசாரின் மன அழுத்தத்தால் நடைபெற்றதாக கருதப்படுகிறது. காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது என கூறினார்.

Update: 2020-07-02 06:01 GMT
மதுரை

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.இதில் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

போலீசார் கைது, விசாரணை காரணமாக சிபிசிஐடி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே தலைமை காவலர் ரேவதி அப்ரூவராக மாறிய நிலையில் சிபிசிஐடி விசாரணையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளது சிபிசிஐடி தரப்பு சாட்சிகளாக சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மற்றும் காவலர் முத்துராஜ் மாறுகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

விடிய விடிய போலீசார் அடித்ததாக மாஜிஸ்திரேட்டிடம் ரேவதி சாட்சியம் அளித்தார். ரேவதியின் சாட்சியத்தின் அடிப்படையிலேயே உண்மை வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று பரபரப்பான சூழலில் சாத்தான்குளம் கொலை தொடர்பான வழக்கு விசாரணை  ஐகோர்ட் மதுரை கிளையில் தொடங்கியது

"காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பும், வேலைக்கான சம்பளமும் வழங்க வேண்டும்" தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறபித்தது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது? கேஸ் டைரி குறித்த முக்கியமான தகவல்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

காவலர் ரேவதியை தொடர்பு கொண்டு நாங்கள் பேச இருக்கிறோம்.கைது செய்தவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளீர்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் ஐகோர்ட்  மதரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
 
ஐகோர்ட் மதுரைக்கிளையில் ஏடிஜிபி தாமரைக் கண்ணன் அளித்த தகவலில் போலீசாரின் மன அழுத்தத்தால் சாத்தான்குளம் சம்பவம் நடைபெற்றதாக கருதப்படுகிறது. காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்