சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது - மாநகராட்சி புள்ளி விவரம்

சென்னையில் கொரோனா பாதிப்பு 2 மடங்கு அதிகரிக்க சராசரியாக 25 நாட்கள் ஆகிறது என்று சென்னை மாநகராட்சி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

Update: 2020-07-09 01:09 GMT
சென்னை, 

சென்னையில் முழு ஊரடங்கு பிறகு கொரோனாவின் தாக்கம் படிபடியாக குறைய தொடங்கி உள்ளது. 

இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் புள்ளி விவரம் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கடந்த மார்ச் மாதம் முதல் கடந்த 6-ந்தேதி தேதி வரை உள்ள கணக்கீட்டின்படி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பதற்கு சராசரியாக 25 நாட்கள் ஆகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மண்டலவாரியாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ராயபுரம்-57.1 நாட்கள், தண்டையார்பேட்டை- 32.7 நாட்கள், திரு.வி.க.நகர்-32.4 நாட்கள், தேனாம்பேட்டை-32.2 நாட்கள், மாதவரம்- 31.7 நாட்கள், பெருங்குடி-29.8 நாட்கள், கோடம்பாக்கம்- 28.8 நாட்கள், அண்ணாநகர்- 27.4 நாட்கள், மணலி- 27.3 நாட்கள், திருவொற்றியூர்- 26.8 நாட்கள், அடையாறு- 24 நாட்கள், அம்பத்தூர்- 23.2 நாட்கள், சோழிங்கநல்லூர்- 22.4 நாட்கள், வளசரவாக்கம்- 22.2 நாட்கள், ஆலந்தூர்- 20.2 நாட்களில் கொரோனா தொற்று இரு மடங்காக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

(இதில் புள்ளிக்கு அப்புறம் வரும் எண்கள் நேரத்தை குறிப்பது ஆகும். அதாவது ராயபுரம் மண்டலத்தில் 57 நாட்கள் ஒரு மணி நேரம் என்று பொருள் ஆகும்.)

மேலும் செய்திகள்