சென்னையில் மொத்தம் 20,271 பேருக்கு கொரோனா சிகிச்சை

சென்னையில் மொத்தம் 20,271 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2020-07-10 05:56 GMT
சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 73,728 ஆக உள்ளது. 

இந்நிலையில் சென்னையில் தற்போது 20,271 பேர் பேர் மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-  

கோடம்பாக்கம் மண்டலத்தில் 2553 பேர்

அண்ணா நகர் - 2,236  பேர் 

தேனாம்பேட்டை-2,036 பேர் 

ராயபுரம் மண்டலத்தில் - 1,582 பேர் 

தண்டையார்பேட்டை-1,522  பேர்

திரு.வி.க. நகர்- 1,538 பேர் 

அம்பத்தூரில் 1,243 பேர்
 
வளசரவாக்கத்தில் 1,051 பேர்

அடையாறு 1,263 பேர் 

திருவொற்றியூரில்-957 பேர்

மாதவரம்-712 பேர் 

மணலியில் 369 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்