திருக்குறள் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் நன்றி

திருக்குறள் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-16 16:51 GMT
சென்னை,

பிரதமர் மோடி திருக்குறளை புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  தமிழில் பிரதமர் வெளியிட்ட பதிவில், “ தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள  இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன். 

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும்.  உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும்  கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்” என்று தெரிவித்து இருந்தார்.

திருக்குறள் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு முதல் அமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். முதல் அமைச்சர் பழனிசாமி இது குறித்து கூறும் போது  தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்துவிட்டதாக பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இனம்,மொழி, நாடு கடந்து அனைத்து தரப்பு மக்களையும் நெறிப்படுத்தும் நூல் திருக்குறள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்