என்ஜினீயரிங் கல்லூரிகள் மாணவர்களின் உள்மதிப்பீடு மதிப்பெண் விவரங்களை அனுப்பவேண்டும் - அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

என்ஜினீயரிங் கல்லூரிகள் மாணவர்களின் உள்மதிப்பீடு மதிப்பெண் விவரங்களை அனுப்பவேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-08-02 08:51 GMT
சென்னை, 

கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி, இளநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் முதலாம், 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு ரத்துசெய்யப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்களின் அக மற்றும் புற மதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை சார்பில் சமீபத்தில் அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு மதிப்பெண் வழங்குவதற்கு ஏதுவாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறை, அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையை நேற்று அனுப்பி இருக்கிறது.

அதில், மாணவர்களின் அக மற்றும் புற மதிப்பீடு மதிப்பெண்களை கணக்கிட்டு அதன் விவரங்களையும், மார்ச் மாதம் 16-ந்தேதி வரையிலான மாணவர்களின் வருகைப்பதிவையும் வருகிற 5-ந்தேதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்