கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநரிடம், குடியரசு தலைவர், பிரதமர் நலம் விசாரிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம், குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் நலம் விசாரித்துள்ளனர்.

Update: 2020-08-03 10:18 GMT
சென்னை, 

இந்தியாவில் 18 லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதேபோல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. லேசான அறிகுறி உள்ளதால் அவரை ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் மருத்துவமனையின் மருத்துவர் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசி மூலம் நலம் விசாரித்துள்ளனர். 

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விரைவில் குணமடைய விரும்புவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்