கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வெகு விரைவில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வெகு விரைவில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி வழங்கப்பட உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2020-08-10 12:18 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் ஆய்வு கூட்டங்களை நடத்திய பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனை செய்யப்படுகிறது. தொழில் வளம், வேளாண் வளம், அதிகரிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள், மருந்துப்பொருட்கள் போதிய அளவு இருப்பில் உள்ளன. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனை செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வெகு விரைவில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி வழங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்ட 6 மாதத்தில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு இதுவரை ரூ.520 கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.   குடிமராமத்து பணிகள் சிறப்பாக செயல்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. வீணாகும் தண்ணீரை சேமிப்பதற்காக தடுப்பணைகள் கட்டும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 42698 வீடுகளுக்கு ரூ.45.50 கோடி மதிப்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைவருக்கும் தலா 2 முக கவசங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு ரூ.235 கோடி அளவுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்